Powered By Blogger

Sunday, March 24, 2024

தற்செயலாய் ஒரு (காமிக்ஸ்) எடிட்டர் !

 நண்பர்களே,

வணக்கம். 160 பக்க நீள பெளன்சர் செமத்தியாகவே வேலை வாங்கி விட்டார் - கடந்திருக்கும் வாரத்தின் பெரும்பகுதிக்கு ! எப்போதுமே Bouncer கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களோடு இருப்பது வாடிக்கை என்பதால் ஓரளவுக்குத் தயாராகவே இருந்தேன் தான் - yet இம்முறை புது மாதிரியான 2 காரணங்களால் வேலை இழுத்து விட்டது ! 

காரணம் # 1 : ஒரிஜினலாக வரிகளை எழுதியவர் ! Yes - பிரபல திரைப்பட டைரக்டரும், கதாசிரியருமான Jodorowski தான் பௌன்சர் தொடரின் பிதாமகர் ! ஆனால் இந்த ஒற்றை சாகசத்துக்கு மட்டும் அவர் பேனா பிடித்திருக்கவில்லை ; கதை பொறுப்பினையுமே ஓவியர் Boucq ஏற்றுக் கொண்டிருந்தார் ! So மைய  கதாப்பாத்திரத்தினில் ஒரு சன்னமான மாற்றத்தினை அவர் செய்திருப்பதை கதைக்குள் புகுந்த பின்னே தான் புரிந்து கொள்ள இயன்றது ! முன்பை விட ஒரு மிடறு நல்லவராய், வல்லவராய், பக்குவமானவராய் பௌன்சர் வலம் வர, அதனைப் பிரதிபலிக்கும் விதமாய்  மொழிநடையினிலும் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகியது ! 

And காரணம் # 2 - இக்கட பேனா பிடிக்கச் செய்திருந்த புது மொழிபெயர்ப்பாளர் ! Behind the scenes - மொழிபெயர்ப்பினில் உதவிட, புதியவர்களுக்கான தேடல்கள் நம் தரப்பினில் சதா நேரங்களிலும் ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கையே & அந்த முயற்சிகளில் சமீபத்தில் கிட்டியதொரு சகோதரி, சிறப்பாகச் செயல்படுவதாகத் தோன்றியிருந்தது ! So அவரிடம் பௌன்சர் பணியினை ஒப்படைத்திருந்தேன் - of course நிறைய வெள்ளோட்டங்களைத் தொடர்ந்தே ! பொதுவாய் புதியவர்களின் பணிகள் மிதமாய் இருப்பதும், அவற்றுள் மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் ரிப்பேர் வேலைகள் செய்வதும்  அவசியமாகிடும் ! ஆனால் இம்முறையோ வேறொரு விதத்தில் பட்டி-டிங்கரிங் அவசியமாகிப் போனது ! புது மொழிபெயர்ப்பாளர்களுக்கு பொதுவாய் நாம் நடத்தும் பாடங்களில் ஒரு பகுதி - சற்றே சுதந்திரமாய் எழுத முனைவது சார்ந்தது ! உள்ளதை உள்ளபடிக்கே ஈயடிச்சான் காப்பியாக எழுதிட பல இடங்களில் அவசியமாகிடும் & maybe சில இடங்களில் நாமாய் சற்றே improvise செய்திட வாய்ப்புகளும் அமைந்திடும் ! பிந்தைய வாய்ப்புகள் வரும் போது அவரவரது கைவண்ணங்களைக் காட்டிட நான் எப்போதுமே ஊக்குவிப்பதுண்டு ! அதே போலவே இம்முறையும் செய்திருந்தேன் ! ஆனால் சிக்கலாகிப் போனது எங்கென்றால், புதிதாய் பேனா பிடித்திருந்த சகோதரி, just about everywhere சுயமாய் வரிகளை அமைத்திருந்தார் ! And அவற்றின் ஒரு பகுதி மெய்யாலுமே வித்தியாசமாய் ; ரசிக்கும் விதமாய் ; மாமூலான சொற்பிரயோகத்தினைத் தவிர்த்திருந்தது ! ஒரிஜினலின் ஸ்கிரிப்ட் கையில் இல்லாது, இந்த மொழிபெயர்ப்பினை மட்டும் படித்திருந்தால், 'அட....இது கூட நல்லாத்தான் இருக்கே ?' என்று தோன்றியிருக்கும் ! But ஒரிஜினலின் ஸ்கிரிப்ட் இல்லாது எடிட்டிங் சாத்தியமே ஆகிடாது என்பதால், ஒரு கத்தையிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழியாக்கத்தினையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பணியினைத் துவக்கினேன் ! ரொம்பச் சீக்கிரமே புரிந்தது - தமிழ் ஸ்கிரிப்ட் ஒரு இணைத்தடத்தில் தனித்து ஓடிக்கொண்டிருப்பது !! ஒரிஜினல் வரிகள் பாந்தமாய் இருக்கும் இடங்களில் கூட சகோதரி தனது improvisations-களைக் களமிறக்கி இருந்தார் ! And அந்த முயற்சியினில் கதையோட்டத்துக்கு அவசியமான சிற்சிறு தகவல்கள் குறைவது போலவும் பட்டது ! 'ஆஹா...சுமாரா இருக்கென்று இதுவரையிலும் எத்தனையோ ஸ்கிரிப்ட்களை மாற்றி எழுதியுள்ளோம் ; but நல்லா இருந்தும் மாற்ற வேண்டிய அவசியம் இந்த தபா நேர்ந்துள்ளதே !' என்று நெருடியது ! ஆனால் கதைக்கு நியாயம் செய்வதாயின் - இயன்றமட்டிற்கு அதனோடே டிராவல் செய்திடல் அத்தியாவசியம் என்பதால், வேறு வழியே இன்றி மாற்றி எழுதத் துவங்கினேன் - and அது பெண்டைக் கழற்றும் பணியாய் மாறிப் போனது ! மாற்றி எழுதியதில் வரிகள் மிகுந்து போவதையுமே சகோதரி கவனிக்கத் தவறியிருந்தார் and as a result - ஒவ்வொரு கட்டத்திலுமே படங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வரிகள் நிறைந்து கிடந்தன ! 'ஆத்தீ...இதைப் பார்த்தாலே நம்மாட்கள் காண்டாகிப்புடுவாங்களே !!' என்ற டர் சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட முக்கால்பங்கு மொழியாக்கத்தினை மாற்றியமைக்க வேண்டிப் போனது & மறுக்கா DTP செய்திடவும் அவசியமாகிப் போனது ! 

ஒரு வழியாய் 2 நாட்களுக்கு முன்னே மொத்தப் பணிகளும் நிறைவுற, நேற்றைக்கு அச்சுக்குப் புறப்பட்டிருந்தார் நம்ம ஒற்றைக்கரத்தார் ! And boy - oh boy - அந்த வித்தியாசமான கலரிங் பாணியில் அள்ளு விடுகிறது ஒவ்வொரு பக்கமும் ! லார்கோ பாணியில் இங்கே டாலடிக்கும் கலர்சேர்க்கைகளை படைப்பாளிகள் செய்திருக்கவில்லை ; மாறாக நாம் எப்போதுமே பார்த்திருக்கும் பௌன்சர் கதைகளின் டிரேட்மார்க்கான சற்றே rustic கலர்களில் பூந்து வெளயாடியுள்ளனர் !! And இம்முறை அச்சிலும் செம துல்லியம் சாத்தியப்பட்டுள்ளது - ஒவ்வொரு பக்கத்தினையும் அதற்காகவே ரசிக்கலாம் போலுள்ளது ! ஒற்றை வரியில் மொத்த இதழையும் விவரிப்பதாயின் - கோடை தெறி ! Of course - கதையின் ஓட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒருவிதக் கருத்திருக்கலாம் தான் ; but கொஞ்ச கால இடைவெளிக்குப் பின்பாய் ஒரு குண்டு புக் சாகஸத்தினை அசத்தலான கலரில் ரசிப்பது நிச்சயமாய் ரம்யத்தைத் தராது போகாதென்றே தோன்றுகிறது ! இனி பைண்டிங்கில் கவனம் செலுத்தும் பொறுப்பு காத்துள்ளது & ஏப்ரலின் இரண்டாவது hardcover இதழும் மிரட்டும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம் ! (காரிகன் புக் - சும்மா தீயாய் அமைந்துள்ளது !!)

குண்டு புக்குகள் ஒன்றுக்கு இரண்டாய் வெளியாகியுள்ள இந்த மாதத்தில் நம்ம சேலம் ஸ்டீல்ஸ் பார்ட்டியின் 'ஆயிரம்வாலா' ஒரிஜினல் கவிதையின் வாலைப் பிடித்துக் கொண்டு கோவை ஸ்டீல் கவிஞர் - "ஆயிரம் தாமரை மொட்டுக்களே !!" என்று எசப்பாட்டைப் பாடி பீதியலைகளை தமிழகம்  முழுக்கப் பரப்பிக் கொண்டிருப்பதை flash news-ல் பார்க்க முடிந்தது !! 'ஆஹா...விட்டாக்கா இந்த பாணபத்திர ஓனாண்டிப் புலவர் - கதை, வசனம், டைரெக்ஷன் என சகலத்தையும் தானே பண்ணி, நமக்கே காதிலே மலர்வளையத்தை செருகிப்புடுவார் என்று தோன்றியது ! So அது பற்றியும் கொஞ்சம் பார்ப்போமே !! 

2018-ன் ஏதோவொரு பொழுதினில் நம்ம STV இந்தத் தகவலை இங்கே blog-ல் பதிவிட்டிருந்திருக்கிறார் ! And அதற்கு நான் பதிலும் கீழ்க்கண்டவாறு போட்டிருக்கிறேன் போலும் !! நம்மளுக்கெல்லாம் அன்றைய பொழுதுக்குப் போட்டிருக்கும் சொக்காய் என்ன கலரென்று கேட்டாலே கண்ணாடியைப் பார்த்துச் சொல்ல மட்டுமே முடியும் ; but நண்பர் ஒரு வண்டிப் பின்னூட்டங்களுக்கு மத்தியில் இதையெல்லாம் தோண்டி / தேடிப் பிடிப்பது எவ்விதமோ - புரியில்லா !! 


MY REPLY

Vijayan26 August 2018 at 18:43:00 GMT+5:30
Tex விஜயராகவன் & friends: ரூம் போட்டே தான் யோசித்தார்கள் என்பது அப்பட்டமாய்த் தெரிகிறது!! வாழ்த்துக்கள் & கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகளும்!! 

கொஞ்ச காலம் முன்பாய் "காமிக்ஸ் பாஸ்போர்ட்" என்றதொரு இலவச இணைப்பை வழங்கிய சமயமே எல்லா வெளியீ டுகளின் எண்ணிக்கையினையும் ஒரு பொழுது போகா நாள ில் போட்டுப் பார்த்தேன்! ஆனால் நான் அந்தக் கணக்குகளை அணுகிய விதம் சற்ற மாறுபட்டது! ஏன் கைக்கு முத்து காமிக்சின் பொறுப்பு மாறியது - " கடல் பூதம்" இதழ் துவக்கத்திலிருந்தே ! அதன் வெளியீட்டு நம்பர் : 167 என்று நினைக்கிறேன்! So 166 இதழ்கள் + வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு முந்தைய அணிகளின் உழைப்பின் பலன்களே! அதையும் எனது பட்டியலோடு கோர்த்துக் கொள்ள மனம  ஒப்பவில்லை! அவை நீங்கலாய் நான் மாத்திரமே அடித்த பல்டிகளை மட்டும் கணக்கில் எடுத்தால் சுமார் 760 தொட்டிருப்போம் என்று நினைக்கிறேன் - தற்சமயமாய ்! தொடரும் அடுத்த சிலபல ஆண்டுகளுக்கு உழைத்திடும் ஆற்றலை ஆண்டவன் கொடையாக அருள்வாரின் - இன்னொர் 5 ஆண்டுப் பொழுதில் ஆயிரம் என்ற நம்பரைத் தொடும்  சாத்தியமுண்டு என்பேன்!! If & when we get there - we will celebrate it for sure guys!!

அட - காரணங்களுக்கா பஞ்சம் - நமக்கொரு புது குண்டு  புக்கை முன்மொழிய ? ஒன்றுமே சிக்காவிட்டால் - "JUST LIKE THAT Special" என்றொன்றை அறிவித்தால்ப் போச்சு!!

Phew !!! ஆறு வருஷங்களுக்கு முன்னே 'அப்பாலிக்கா பாத்துக்கலாம் !' என்ற தகிரியத்தில் அள்ளி விட்டதொரு வாக்குறுதி இன்றைக்கு மீண்டும் உயிர்பெற்று முன்னிற்கிறது ! Truth to tell, போன வருஷத்தின் ஏதோவொரு பொழுதிலேயே  "ஆயிரம்" என்ற இந்த மைல்கல்லை தாண்டியிருப்போம் என்பது எனக்குத் தெரிந்திருந்தது ! But சும்மாவே அறுபது-எழுபது இதழ்களைப் போட்டு, போன வருஷத்தினை தெறிக்க விட்டுக் கொண்டிருந்த சூழலில், இதையும் சேர்த்துக் கொண்டால் வம்பாகிப் போகுமே என்று டிக்கியை க்ளோஸ் செய்தே வைத்திருந்தேன் ! But கொஞ்சம் லேட்டானாலும், லேட்டஸ்ட்டாய் பட்டியல் போட்டு வந்துள்ளனர் நண்பர்கள் !! இன்னுமொரு Phewwwww !! 

1000 !! ஆயிரம் !! மிரட்டலானதொரு நம்பர் தான் ! And மறக்க முடியாதோர் நெடும் பயணத்தின் பலனும் தான் ! ஆனால் இது எண்ணற்றோரின் கூட்டு முயற்சிகளின் பலனே எனும் போது - இதற்கான பெருமையினை, வேதாளரின் அடர்கானகக் குகை போலான எனது சொட்டைக் கபாலத்தில் மட்டும் ஏற்றிக் கொள்வது பொருத்தமாகாது என்பேன் ! 'இது லயனின் ஆயிரமாவது இதழ் ; முத்து காமிக்சின் இதழ் # 1000" என்ற மைல்கல்களைத் தொட்டிருப்பின்  - தாரை தப்பட்டை கிழியக் கொண்டாடியிருக்கலாம் தான் ! But இதுவோ தனிமனித நம்பர் தானே மக்கா ? இதுக்கு தடபுடலெல்லாம் தேவை தானா ? 

ஸ்பெஷல்களோ ; இல்லியோ - முப்பத்தி ஒன்பது ஆண்டுகளில் 1000 என்பது ஒரு சுலப நம்பர் அல்ல தான் - moreso ஒரு பொம்ம புக் வரிசைக்கு ! And இதில் கூத்தென்னவென்றால் - தோராயமாய் முதல் 27 ஆண்டுகளில் எம்புட்டு புக்ஸ் போட்டிருப்போமோ - அதனை தொடர்ந்த 12 ஆண்டுகளிலேயே தொட்டிருப்போம் ! Comeback ஸ்பெஷல் இதழின் 2012 க்குப் பின்பான நமது வேகம் பிசாசுகளின் வேகம் என்பதில் no doubts ! இந்த வேகமோ ; 1988 களின் வாக்கில் - லயன் ; திகில் ; ஜூனியர் லயன் ; மினி லயன் ; முத்து காமிக்ஸ் என்று சுளுக்கெடுத்துக் கொண்டிருந்த பொழுதுகளின் வேகமோ - துவக்கம் முதல் நமது மொத்தப் பயணத்துக்குமே இருந்திருப்பின் - இந்நேரத்துக்கு ரண்டாயிரம் ; மூவாயிரம் - என ஏலம் போட்டுக்கொண்டிருந்திருக்க முடிந்திருக்கும் ! And "வாரமலர்" இதழ்களை ஸ்கேன் பண்ணி, பிரிண்ட் போட்டு "Only 2500 மக்கா" என இன்று ஏலம் போடுவதைப் போல ஏகப்பட்ட சேவையாற்றிடும் பெரும் கடமைகளும், ஆர்வலர்களின் பொறுப்பான தோள்களில் விழுந்து வைத்திருக்கும் ! (By the way - வாரமலர் இதழ்களை மறுபதிப்பு செய்திட முயற்சிப்போம் guys ; சீக்கிரமே சொல்கிறேன் !)

Second wind என்று சொல்வார்கள் - நெடும் தூர ஓட்டத்தில் பங்கேற்போர் ! முதலில் ஒரு stretch ஓடுவதிலேயே நாக்குத் தொங்கிவிட்டது போல் தோன்றுவதும், ஆனால் கொஞ்ச நேரத்தில் எங்கிருந்தோ அதிசயமாய், புதுசாய் 'தம்' கிட்டிட, மறுக்கா செம வேகமெடுப்பார்கள் ! அது போல் தான் பார்க்கத் தோன்றுகிறது - இந்த 2012-க்குப் பின்பான நமது மறுவருகையினையும், அதன் நீட்சியான உத்வேகத்தையும் ! 1984-ல் வேறு வழி தெரியாமல் காமிக்ஸ் போடப் புகுந்தவன் தான் நான் என்பதை என்றைக்குமே ஒளித்ததில்லை ; if things had gone to plan - கோகுலம் போல ; பூந்தளிர் போல ஒரு சிறார் மேகஸினுக்கு எடிட்டராய் குப்பை கொட்டியிருந்திருப்பேன் - for God knows how long ! ஆனால் பெரும் தேவன் மனிடோ தீர்மானித்திருந்தது வேறு விதமாய் ! And அவரது கொடையில் தான் இன்றும் வண்டியோட்டிக்  கொண்டிருக்கிறேன் - ஒரு காமிக்ஸ் எடிட்டராய் ! So டெக்ஸ் வில்லர் சாகசத்தை தலைப்பைப் போல "தற்செயலாய் ஒரு காமிக்ஸ் எடிட்டர்" எனலாம் !   

And இந்தத் தற்செயலான காமிக்ஸ் எடிட்டருக்கு Post 2012 - அந்த "ரெண்டாவது மூச்சு" கிடைக்காது போயிருப்பின், ரிட்டையராகும் தருணம் வரைக்கும் ஆயிரம்-ரண்டாயிரம் என்ற மைல்கல்களெல்லாம் சாத்தியமே ஆகியிராது ! 'தேமே' என ஆண்டுக்கு 20 புக்ஸ் போல போட்டு விட்டு, நிதான நடை போட்டிருந்திருப்போம் ! ஆனால்...ஆனால்....அந்த second wind என்ற மாயாஜாலம் தான் 2012 to இதுவரையிலுமான 2024-ல் பல அசாத்திய நம்பர்களை ; அசாத்திய நண்பர்களை சந்திக்க வாய்ப்புத் தந்துள்ளது ! எத்தனை எத்தனை புக்ஸ் ; எத்தனை குண்டு புக்ஸ் ; எத்தனை ஸ்பெஷல்ஸ் ; எத்தனை பக்கங்கள் ; எத்தனை ஜானர்கள் ; எத்தனை அனுபவங்கள் - லேசாய் அசை போடும் போதே கண்ணைக்கட்டுகிறது !! And இம்மி கூட யோசிக்க அவசியமே லேது - இந்த ராட்சஸ ஆற்றலெல்லாம் எங்கிருந்து வந்ததென்று ; becos அதன் விடை நமக்கு ஸ்பஷ்டமாய்த் தெரியும் ! நீங்களே ; இங்குள்ள ஒவ்வொருவருமே - இந்தப் புத்துணர்ச்சிக்கும் ; உத்வேகத்துக்கும் காரணகர்த்தாக்கள் ! 

எப்படி என்கிறீர்களா ? சொல்கிறேனே : 

1984 முதல் 2011 வரையிலான பயணத்தில் நான் ஈட்டியிருந்தது ஏகப்பட்ட நற்பெயரையும் ; கணிசமான நாறப்பெயரையுமே ! So 2012-ல் மறுக்கா கடை போட நான் முனைந்த போது - 'ஹி ..ஹி...தம்பி நாலு மாசம் ஒட்டுமா வண்டிய ?' என பகடியோடு என்னைப் பார்த்திருக்கலாம் தான் ! Oh yes - கெக்கலிப்போடு என்னிடம் பேசியோரும் அன்றைக்கு ஒரு சிறுபான்மையில் இருந்ததை மறுக்க மாட்டேன் தான் ; ஆனால் பெரும்பான்மையினர் நெடுநாளாய் தொலைந்து போன்றதொரு நண்பனை சந்தித்த வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டது தான் highlight ! இந்த இரண்டாவது இன்னிங்சில் உங்களிடமிருந்த பக்குவமும், நிதானங்களும் சிறுகச் சிறுக என்னிடமும் தொற்றிக் கொண்டன ! மூ.ச.க்களை ஒரு பயணத்தின் தவிர்க்க இயலா அங்கமாய்ப் பார்த்து விட்டு, அங்கிருந்துமே முழுசாய் மீண்டு, பயணத்தைத் தொடர்வது எப்படியென்று கற்றுத் கொள்ள முடிந்தது ! இதோ - இந்த 2024-ல் ஒரு குட்டியூண்டு சர்குலேஷனிலுமே உலகத்தரத்தில் டின்டின் ஆல்பங்களை வெளியிடும் சூட்சமங்களைக் கற்றுத் தந்திருப்பதும் நீங்களே ! எல்லாவற்றிற்கும் மேலாய் - அந்த ஈரோ ; இந்த ஈரோயினி ; அந்த பெசல் ; இந்த பெசல் - என்ற கணக்கு வழக்குகளையெல்லாம் தாண்டி - உருப்படியானதொரு பயபுள்ளையாய் ; நல்லதொரு நண்பனாய் இருப்பதே பிரதானம் என்ற புரிதலைப் புலரச் செய்தீர்கள் ! இம்புட்டு போதாதா - கைமாறாக சிக்கின, சிக்கின பல்டிக்களையெல்லாம் அடித்து - சமீப ஆண்டுகளை ஒரு காமிக்ஸ் மேளாவாக்கிடும் வைராக்கியம் என்னுள் பிறப்பதற்கு ? 

And இங்கே - நமது இந்த blog-ன் பங்களிப்பையும் மறுப்பதற்கில்லை ! அமைதியாய் வாசிப்போரும் சரி, ஆரவாரமாய் பின்னூட்டமிடுவோரும் சரி, மாயாவி மாமாவுக்கான மின்சாரத்தைப் போல் என்றால் மிகையாகாது ! ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும், உங்களிடமிருந்து ஏற்றிக் கொள்ளும் சார்ஜ் தானே இந்த Version 2.0-ன் எரிபொருளே ? So இங்கு நீங்கள் முன்வைத்திருக்கும் இந்த 'ஆயிரம்வாலா' கோரிக்கையினை மறுக்கவாச்சும் முடியுமா - simply becos இது எனது தனிமனித மைல்கல்லே அல்ல ; ரயில்பெட்டிகள் ஒன்று சேர்ந்து எஞ்சினை முடுக்கி விடும் ஒரு அதிசயத்தின் கொண்டாட்டம் எனும் போது !

JUST LIKE THAT ஸ்பெஷல் !!!! போட்டுத் தாக்கிடலாமா guys ? ஆயிரம் பக்கம் ; ஆயிரத்து சொச்சம் பக்கம் என்றெல்லாம் கப்பைகளைப் பிளக்காமல் - ரூ.400 to ரூ.500 விலைக்குள் இருப்பது போல் ஏதேனும் ஒன்றைத் திட்டமிடுவோமே ? எதை போடலாமென்று any suggestions மக்கா ?   

Bye all ; see you around ! Have a lovely Sunday ! இளம் டெக்ஸ் வில்லர் பணிகளுக்குள் குதிக்கப் புறப்படுகிறேன் ! 

Sunday, March 17, 2024

சம்முவம் வெயிட்டிங்க்க் !!

 நண்பர்களே,

வணக்கம். அனலாய் நாட்கள் கொதிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ஆண்டின் ஒரு முதல் peak பொழுதினை நோக்கி விரைந்து கொண்டுள்ளது நம்ம காமிக்ஸ் வந்தே பாரத் !! அட்டவணைகளை எத்தனை சாதுர்யமாய்த் திட்டமிட்டாலுமே, கொஞ்ச மாதங்கள் லாத்தலாகவும், சில மாதங்கள் பிசியோ பிஸியாய் அமைந்திடுவதே வாடிக்கை ! And இதோ - பிப்ரவரி & மார்ச் என்ற 2 சாத்வீக மாதங்களைத் தொடர்ந்து வரவுள்ள ஏப்ரல் & மே மாதங்களில் ஜாக்கி சானின் வேகத்தில் ஆக்ஷன் துவங்கிடவுள்ளது ! ஒரு black & white குண்டு புக்கோடு க்ளாஸிக் காரிகனார் ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் எனில், இதோ - முழுவண்ணத்தில் ஜொலிக்கும் ஹார்ட்கவர் இதழில் களம் காணவுள்ளார் ஒற்றைக்கர பௌன்சர் !!  

கிட்டத்தட்ட ஒன்பது-பத்தோ ஆண்டுகளுக்கு முன்னே நம்மோடு அன்னம், தண்ணீ புழங்க ஆரம்பித்தவர் இந்த வன்மேற்கின் violent நாயகர் ! கதாசிரியர் Jodorowski-ன் இந்த தாறுமாறு ஹீரோ, சிக்கிடும் வாய்ப்புகளிலெல்லாம் நம்மை திகைக்கச் செய்யத் தவறியதே இல்லை ! அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களாகட்டும் ; அடிதடி ரகளைகளிலாகட்டும் - இவருக்கு சமரசங்களே கிடையாது ! And இந்த ஆல்பமுமே அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல ! இங்கே விரசம் தூக்கலாக இருக்கப்போவதில்லை - ஆனால் கதைக்களமும் சரி, மாந்தர்களும் சரி - இரக்கம் அறியா ரகங்கள் ! So டெட்வுட் டிக் வந்த சற்றைக்கெல்லாம் yet another கௌபாய் சாகசம் - உங்கள் புருவங்களை விரியச் செய்திட தயாராகி வருகிறது ! இதோ - மேம்படுத்தப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படம் : 

வழக்கம் போலவே அட்டைப்பட நகாசு வேலைகளையும் கணிசமாகாவே செய்துள்ளோம் - கையில் ஏந்தும் போதே மிரட்டலானதொரு அனுபவத்தினைத் தந்திட ! And பக்கங்களைப் புரட்டும் போதோ, உங்களுக்கென ஒரு சித்திர அதகளம் காத்திருக்கும் ! பாருங்களேன் - ஓவியர் + கலரிங் ஆர்ட்ஸிட்களின் ரகளைகளை :

ரொம்பச் சமீபத்தில் திருவாளர் பௌன்சர் இன்னொரு புது ஆல்பத்தோடும் பிரெஞ்சில் களம் கண்டுள்ளார் ; so "சாபம் சுமந்த தங்கம்" கண்டிடும் வரவேற்பினைப் பொறுத்து அதனையும் அடுத்தாண்டின் ரயிலில் கோர்த்துக் கொள்ளலாம் ! What say folks ?

ஏப்ரலின் 2 black & white இதழ்களுமே பொரி பறக்கச் செய்கின்றன - இளம் டெக்ஸ் & ஏஜெண்ட் ராபினின் ரூபங்களில் ! அவற்றை அடுத்த வாரத்துப் பதிவுக்கென வைத்துக் கொண்டு அடுத்த சமாச்சாரம் பக்கமாய் நகர்ந்திடலாமா ? 

MAKE YOUR OWN MINI SANTHA !! MYOMS !!

நடப்பாண்டின் அட்டவணை அறிவிப்பினைத் தொடர்ந்து இந்த முன்பதிவுத் தடம் பற்றி நாம் நிரம்பவே பேசியிருந்தோம் ! Of course - 'சிவாஜி செத்துட்டாரா ?' என்ற ரேஞ்சில் நம்மில் சிலருக்கு இது மொத்தமாய் மறந்துமிருக்கலாம் தான் ! Anyways - இதோ, நவம்பர் 30 தேதிக்கு நிறைவுற்ற வோட்டெடுப்பினில் நீங்கள் சொன்ன சேதி : 

*C.I.A.ஏஜெண்ட் ஆல்பா 

*பிரென்ச் ஏஜெண்ட் சிஸ்கோ

*க்ளாஸிக் - ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் மறுபதிப்பு

*ப்ளூகோட் பட்டாளம் 



விற்பனைகளில் லைட்டாய் பிசிறடிப்போர் கூட ரெகுலர் சந்தாக்களில் இடம்பிடித்திட வேண்டாமே - என்ற திட்டமிடலுக்கேற்ப, மேற்படி நான்கு இதழ்களையும் ஒரு பிரத்தியேக ; முன்பதிவுக்கு மட்டுமான தனித்தடத்தில் பயணிக்கச் செய்வதெனத் தீர்மானித்திருந்தோம் ! Here is the broad outline :

*இந்த 4 இதழ்களுமே 400 என்ற முன்பதிவு நம்பரை எட்டிடும் பட்சத்தில் மட்டுமே நனவாகிடும் !

*இவை கடைகளிலோ, புத்தக விழாக்களிலோ வலம் வந்திடும் இதழ்களாக இருந்திடாது !  Of course - முகவர்களும் முன்பதிவு செய்தால் கிடைக்கும் தான் ! 

*மிகச் சுருக்கமான பிரிண்ட்ரன் என்பதால், விலைகள் கொஞ்சம் தா.மா.த.சோ.ரேஞ்சில் இருப்பதினைத் தவிர்க்க இயலாது !

*CIA ஆல்பாவின் அடுத்த ஆல்பம் - 2 அத்தியாய 96 பக்க சாகசமாய் அமைந்திட வேண்டி வரும் !

*சிஸ்கோ சாகசமும் likewise - 2 அத்தியாயங்கள் ; 96 பக்கங்கள் ! 

*ப்ளூகோட்ஸ் எப்போதும் போலவே சிங்கிள் ஆல்பமாய் - 48 பக்கங்களில் !

*ஜான் மாஸ்டர் + ரெட்டை வேட்டையர் இணைந்த இதழானது - முன்வந்த அதே (பாக்கெட்) சைசில் - உத்தேசமாய் 240 பக்கங்களுடன் இருந்திடும் !

*So இந்த 4 இதழ்களின் combo நனவாகிடும் பட்சத்தில் - உத்தேசமாய் ரூ.930 ப்ளஸ் கூரியர் செலவுகள் என்பது போலானதொரு தொகையினை செலுத்த அவசியமாகிடும் !  

*முன்பதிவுக்கென 120 நாட்களின் அவகாசம் தந்திடலாம் ! Of course - நாம் எதிர்பார்க்கும் நம்பரானது அதற்கு முன்னமே தேறிவிட்டால், காத்திருப்புக்கு அவசியங்களின்றி ஒவ்வொன்றாய் இதழ்களை வெளியிட ஆரம்பிக்கலாம் !

*ஒருக்கால்.......ஒருக்கால்.... இந்த முன்பதிவு இலக்கினை 120 நாட்களிலும் எட்டிப்பிடிக்க இயலாது போயின், ஒரு கோடிச் சூறாவளிகள் சந்து பொந்தெல்லாம் சாத்தியெடுக்க - இந்தத் திட்டம் நமத்துப் போன பட்டாசாகிப் போய்விடும் ! அவ்விதமாகிடும் பட்சத்தில் முன்பதிவு செய்துள்ளோரின் தொகைகள் பத்திரமாய் திரும்ப அனுப்பப்படும் !

So இது தான் பொதுவான திட்டமிடல் ! "தகிரியமாய் களமிறங்கலாம் ; நாங்க வாங்கவும் செய்வோம் - வாசிக்கவும் செய்வோம் !" என்று நீங்கள் உறுதியாய் சொல்லும்பட்சத்தில், ஏப்ரலின் இதழ்களிலேயே இதற்கான அறிவிப்பைப் போட்டுத் தாக்கிடலாம் ! ஏப்ரல், மே, ஜூன், ஜூலை - என 4 மாத அவகாசம் சாத்தியமாகிடும் ! So இந்தத் திட்டமிடலில் எல்லாம் ஓ.கே. எனில் - "VVS" - என பதிவிடுங்கள் - "வண்டிய விட்றா சம்முவம் ! !" என்று அறிவித்திட !

அதே சமயம் - "இல்லீங்கணா....அந்நேரம் ஏதோ தோணுச்சு ; ஒரு குஜாலுக்கு  பச்சக்குனு பட்டனை அமுக்கிக்கினோம் ! ஆனா இப்போ அந்த வேகத்தை தேடுனா காங்கலே...! அதுமட்டுமில்லாம, மே மாசம் வேற ஆன்லைன் விழா ; ஆப்பம் சுடுற விழான்னு நடத்துவே தானே ? So பைய்ய..பதறாம அப்பாலிக்கா பாத்துக்கலாமே ?" என்று உங்களுக்குத் தோன்றிடும் பட்சத்தில் - "DMS" என்று பதிவிடுங்கள் - ""டிக்கிய மூட்றா சம்முவம் !" என்று தகவல் சொல்லும் விதத்தில் ! 

நீங்க எந்த லைட்டைப் போடச் சொல்றீகளோ, அதற்கேற்ப வண்டியின் பயணம் தீர்மானிக்கப்படும் ! பிரேக்கும் சரி, ஆக்சிலரேட்டரும் சரி - இப்போது உங்கள் கைகளில் guys ! So உங்கள் தீர்ப்பினை அறிந்திட, this சம்முவம் ஆவலுடன் வெயிட்டிங்க்க்க் ! Bye guys....see you around ! Have a cool Sunday !

Saturday, March 09, 2024

ஒரு கிய்யாமோ-மிய்யாமோ படலம்

 நண்பர்களே,

வணக்கம். மெது மெதுவாய் மார்ச் நகர்ந்து கொண்டிருக்க, இவ்விட நம்ம டீமோ ஏப்ரல் ; மே என்று சஞ்சாரம் செய்து கொண்டுள்ளது ! சற்றே crisp வாசிப்புகளுக்கான இதழ்களை நடப்பாண்டின் அட்டவணைக்குள் பிரதானமாய் புகுத்தியதில் உங்களுக்கு எம்புட்டு குஷியோ, கடுப்போ - முழுசாய் ஞான் அறியில்லா ; பட்சே நம்ம டீமானது இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது ! ஐநூறு பக்கங்கள் ; அறுநூறு பக்கங்கள் என்ற ரவுசுகளை 2024-ல் நாம் மட்டுப்படுத்தியிருப்பதால், நமது backend-ன் வேலைப்பளு நிரம்பவே மெலிதாகியுள்ளது ! ஆனால் நமக்குத் தான் சைக்கிள் கேப்பில் ஏதாச்சும் இடைவெளி தென்பட்டால் கூட - அதனுள் புல்டோசரை நுழைத்துப் பார்க்கும் ஆர்வம் எழுந்திடுமே ; so 'ஆன்லைன் மேளா ; ஆப்பக்கடை கீழா' - என்ற ரேஞ்சில் புச்சு புச்சான திட்டமிடல்களில் பொழுதுகளை நகர்த்தி வருகிறோம் !

அதனிடையே ஒரு கிய்யாமோ-மிய்யாமோ படலம் - கடந்த 10 தினங்களாக அரங்கேறி வருகிறது ! 

  • சிக்கலான ; செம complex ஆன கதைகளுக்குள் தம் கட்டி இறங்கி, கூகுளை அலசி ஆராய்ந்து கரை சேரணுமா ?                                எப்படியாச்சும் செஞ்சுப்புடலாம்ணே ! 
  • டின்டின் போலான தொடர்களில், ஒரே கதைக்குள் ஏழு மாசங்களுக்கு சலிக்காமல் செக்குமாடாட்டம் சுற்றிச் சுற்றி வரணுமா ?                    பல்லைக் கடிச்சிட்டே  பண்ணிடலாம்ஜி  ! 
  • கி.நா.ஸ் ? Oh yes ! 
  • டார்க்கான கதைகள் ?                                                                                      லைட்டைப் போட்டுக்கினு விடிய விடிய குந்திக்கினே எழுதிடலாம் சாரே ! 

ஆனால்....ஆனால்....இவற்றையெல்லாம் விட அசாத்தியமாய் பெண்டைக் கழற்றவல்ல பணி ஒன்று உள்ளது ! அதனில் தான் கடந்த பத்து திவசங்களாய் ஞான் பிசியாகி, இல்லாத கேசத்தில் கணிசத்தை தொலைக்க நேர்ந்துள்ளது ! க்ளாஸிக் கதைகள் ; நேரோ நேர்கோட்டுக் கதைகள் ; 'கராத்தே வெட்டு வெட்டினார் ; வாழைத்தண்டு ஜூஸ் பருகினார் !' என்ற ரேஞ்சிலான வஜனங்களை உள்ளடக்கிடும் '70s கதைகள் !! இவைகளுக்குள் புகுந்து ; பணி முடித்து வெளிப்படுவதென்பதெல்லாம் ஒரு அசாத்திய ஆற்றலையும், பொறுமையையும் கோரிடும் சமாச்சாரம் - at least என்னளவிற்காவது ! இளவரசி கதைகளில் நான் குறிப்பிடும் இதே நேர்கோட்டுத்தனம் இருக்கும் தான் ; ஆனால் அங்கே கொஞ்சமாச்சும் கார்வினின் நையாண்டிகள் ; பிரிட்டிஷ் வறண்ட ஹியூமர் - என தேறிடுவதால் வண்டியை ஓட்டி விடலாம் ! டெக்ஸ் கதைகள் straight as an arrow தான் ; but 'தல' பேசும் பன்ச் வரிகள் ; கார்சனுக்கான கவுண்டர்கள் என்று பொழுது செமத்தியாக ஓடி விடும் ! நம்ம ஒல்லியார் லக்கி  நேர்கோட்டு லீனியர் கதைக்காரரே - yet அங்கு நகைச்சுவையில் ஸ்கோர் செய்திட ஓராயிரம் தருணங்கள் அமைந்திடும் ! தட்டைமூக்கார் டைகரின் கதைகளிலும் twists இருக்கும் ; அவரது வசனங்களிலும் ஒரு மெலிதான பகடி இருக்கும் ! ஆனால் - நம்ம வேதாள மாயாத்மாவாகட்டும் ; டிடெக்டிவ் சார்லீயாகட்டும் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ஆகட்டும் ; FBI ஏஜெண்ட் பிலிப் காரிகன் ஆகட்டும் ; மாயாஜாலப் பார்ட்டீ மாண்ட்ரேக் ஆகட்டும் ; மாயாவிகாரு ஆகட்டும் ; லாரன்ஸ்-டேவிட் ஜோடியாகட்டும் ; ஜாக்கி நீரோவாகட்டும்  - இம்மியும் எக்ஸ்டரா நம்பர்களைக் கோரிடாது - உள்ளதை, உள்ளபடிக்கே மொழிமாற்றம் செய்து ஒப்படைக்கும் பொறுப்பை மட்டுமே நம்மிடம் தந்திடுவார்கள் ! And அதன் லேட்டஸ்ட் படலம் தான் நான் குறிப்பிட்ட அந்தக் கிய்யாமோ-மிய்யாமோ ரகளை !   

SUPREME '60s !! இரண்டாம் சீசனாக அமெரிக்க க்ளாஸிக் ஜாம்பவான்களை தொகுப்புகளில் வாசிக்கும் இந்தத் தனித்தடத்தின் கடைசி இதழ் பெண்டிங் உள்ளது ! And அது தான் நம்ம FBI ஏஜெண்ட் காரிகன் ஸ்பெஷல் - 2 ! பத்துக் கதைகள் ; முன்னூற்றி எண்பதுக்கு அருகாமையில் ஒரு பக்க எண்ணிக்கை என்பதே திட்டமிடல் ! And இந்த SMASHING '70s ; SUPREME '60s தடங்களின் சகல கதைகளின் மொழிபெயர்ப்புப் பணியினையும் கையாண்டு வருவது நமது கருணையானந்தம் அங்கிள் தான் ! In fact கொஞ்ச காலமாகவே க்ளாஸிக் கதைகளை பிரத்தியேகமாக அவரிடம் மாத்திரமே ஒப்படைத்து வருகிறோம் ! இந்த ரகக் கதைகளில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு ஸ்கோர் செய்திட வாய்ப்புகள் சொற்பமோ - சொற்பம் ; left - right ...left -right .....என்று மார்ச்பாஸ்ட் செய்வது போல ஒரே சீராய் எழுதிக் கொண்டே செல்ல மட்டுமே வேண்டியிருக்கும் ! Yet - துளியும் தளராது, சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொண்டபடியே, பக்கம், பக்கமாய்த் தொடர்வதென்பதெல்லாம் லேசுப்பட்ட காரியமே அல்ல !! And அதனை அசாத்தியமாய் அங்கிள் தொடர்ந்து வருகிறார் என்பதால் எனது பெண்டு தப்பி விடுகிறது ! Truth to tell - க்ளாஸிக் நாயகர்களின் மத்தியில் ஒரே ஒருத்தருக்கு மட்டும் பேனா பிடிப்பது எனக்கு பிடித்தமான சமாச்சாரம் - and அது நம்ம ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பிக்கு ! அவரது கதைகளில் இழையோடும் ஒரு மெலிதான ஹியூமரையும், டெஸ்மாண்ட்-விக்கர்ஸ் மத்தியிலான உரையாடல்களையும் லயித்து எழுதிட இயலும் என்பேன் ! அவர் நீங்கலான மீதப் பேரெல்லாம் - வாசிக்க சுகப்படுவர் ; but பணியாற்ற முனைந்தால் சுக்கா போட்டு விடுவர் !  

காரிகன் கதைகளையும் கொஞ்ச வாரங்களுக்கு முன்னமே மொழிபெயர்த்து வாங்கியும் விட்டாச்சு ! நம்மாட்கள் DTP செய்து கையில் தந்தும் விட்டார்கள் ! எடிட்டிங் முடித்தால் பிரின்டிங் பண்ணப் புறப்படலாம் தான் ! ஆனால் கடோத்கஜனின் பருமனில் மேஜை மீது படபடத்துக் கொண்டிருந்த கதைக்குவியலுக்குள் புகுந்து வெளி வருவது அத்தனை சுலபமாய் தென்படவே இல்லை ! 'ரைட்டு...நெதம் ஒரு கதைய வூட்டுக்கு எடுத்து போறோம் ; வாசிக்கிறோம் ; திருத்தங்கள் போடறோம் ; பத்தே நாட்களில் சுபம் போடறோம் !' என்று நினைத்துக் கொண்டே முதல் கதையைக் கையோடு எடுத்துப் போனேன் ! மாமூலாய் பணிசெய்யும் தருணத்தில் இதைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் பத்து பக்கங்களைத் தாண்டக் கூட முடியலை ; corrections ; தேவையின்றி repeat ஆகும் வசனங்களை / முன்னுரைகளை காலி பண்ண வேண்டிய அவசியம் ; லே-அவுட்டில் செய்திட வேண்டிய திருத்தங்கள் ; அந்நாட்களின் மொழிபெயர்ப்புகளில் இருந்த பிழைகளைத் திருத்தல் - என்று ஒரேடியாக கண்ணைக் கட்டின ! இதன் மத்தியில், பட்டையான காலருடனான கோட்-சூட் போட்டபடிக்கே - சரக்கையோ, சர்பத்தையோ, இம்மி-இம்மியாய் சப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் ஈரோ சாரை வசியப்படுத்த  பச்சை கலரில் விக் வைத்துக் கொண்டே க்ளப் டான்ஸ் ஆடும் அந்நாட்களின் தமிழ் பட கவர்ச்சிக் கன்னியைப் போல, ஒரு பக்கமிருந்து டின்டினின் புதுப் பணிகள் என்னை "வாயேன் டா...அட..வாயேண்டா !" என seduce செய்வது போலவே இருந்தது ! பெளன்சரும், ஒரு டபுள் ஆல்ப தெறி சாகசத்தோடு கண்சிமிட்டிக் கொண்டே இருப்பது போலிருந்தது ! ஏஜெண்ட் ராபினாருமே "ஒரு tight க்ரைம் த்ரில்லருக்கு வாரீகளா ?" என்று கூவிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது ! இந்த சபலங்களுக்கெல்லாம் கடுக்காய் கொடுத்து வந்தால் OTT-ல் டிசைன் டிசைனாய் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும் சேதிகள் கும்மியடித்தன ! Phew !! 'தம்' கட்டி ஒவ்வொரு காரிகன் கதையினையும் எடிட் செய்யும் போது தான் அவற்றை எழுத என்ன மாதிரியான discipline அவசியமாகியிருக்கும் என்பது புரிந்தது ! கடைசி நிமிஷத்தில் காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டே, தேதியின் மீதொரு கண்ணைப் பதித்தபடிக்கே பணியாற்றும் last minute சோம்பேறிமாடனுக்கெல்லாம் சீரான இந்த எழுதும் discipline சாத்தியமே ஆகிடாதென்பது புரிந்தது ! ஒரு மாதிரியாய் இல்லாத குட்டிக்கரணங்களையெல்லாம் போட்டு, ஒரு மாதிரியாய் வியாழனிரவு பணிகள் முடித்து DTP டீமிடம் ஒப்படைத்து விட்டேன் ! வரும் செவ்வாய்க்கு அச்சுக்குப் புறப்படுவார் நம்ம காரிகன்ஜி !

And yes - இந்தப் பத்துக் கதைத் தொகுப்பினில் 4 க்ளாஸிக் ஹிட் கதைகள் உள்ளன :

  • மடாலய மர்மம் 
  • வைரஸ் X 
  • கடலில் தூங்கிய பூதம்
  • பழி வாங்கும் பாவை 

இவற்றை ஒரிஜினலாய் அந்நாட்களில் எழுதியதும் கருணையானந்தம் அங்கிள் தான் என்பது அந்தச் சொற்பிரயோகங்களே காட்டிக் கொடுக்கின்றன ! ஓவராய் புராதனம் தொனிக்கும் பகுதிகளில் லேசு லேசாய் திருத்தங்கள் போட்டு விட்டு, SUPREME '60s தடத்தின் final இதழுக்கு டாட்டா சொன்ன போது - நேபாளத்து ட்ரிப் கெலித்த சரவணகுமார் சாரைப் போலவே ஒரு பேஸ்தடித்த சிரிப்பை உதிர்த்துக் கொண்டேன் !! க்ளாஸிக் ரசிகர்களுக்கு இதுவொரு முழு அசைவ மீல்ஸின் திருப்தியினைத் தருமென்பது உறுதி !! But "புராதனமாஆஆ ???" என்ற ரியாக்ஷன் தருவோர் - that பல்லடத்து புன்சிரிப்பு moment-ஐ உணர்வர் என்பதிலும் ஐயங்களில்லை எனக்கு !

ரைட்டு....இந்தத் தனித்தடம் done & dusted ! அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு முன்பாய் - Supreme '60s அறிவிப்பினை செய்த வேளையில் நான் பண்ணியிருந்ததொரு பிராமிசையும் இங்கே நினைவு கூர்ந்திடுகிறேன் ! And அது தான் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 தடத்தின் அங்கமாக இல்லாது போனாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் independent ஆக வெளிவந்திடும் - என்பதே அன்றைய பிராமிஸ் ! 

இப்போது சொல்லுங்களேன் guys - மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? If yes - நடப்பாண்டின் ஏதோவொரு வேளையில் தொப்பிக்காரரை நுழைத்திடலாம் ! சொல்லுங்களேன் folks !! "சுனாமியைப் பார்த்துப்புட்டோம் ; கொரோனாவைத் தாண்டிப்புட்டோம் ; பவர் ஸ்டார் படங்களையும் ஜீரணிச்சுட்டோம் ! இதையும் பாத்துப்புடலாமே ! என்று மேச்சேரிக்காரர் குழல் ஊத, 'ஆமா..ஆமா....டெபினிடலி !' என்று அமெரிக்கக் குரல் கேட்கும் என்பதில் எனக்கு no doubts ! இருந்தாலும் மீத நண்பர்களின் குரல்களையும் கேட்டு விட்டால் தேவலாமே என்று நினைத்தேன் ! 

Bye all....have a lovely weekend !! டின்டின் க்ளைமாக்ஸ் ஆல்பமான "கதிரவனின் கைதிகள்" இக்கட வெயிட்டிங் என்பதால் நான் புறப்படுகிறேன்  ! See you around !


கடலில் தூங்கிய பூதம் 

பழி வாங்கும் பாவை 

வைரஸ் X 


Saturday, March 02, 2024

கேள்விகள் முடிவதில்லை !

 நண்பர்களே,

வணக்கம். மார்ச் இதழ்கள் இன்னமும் கணிசமான நண்பர்களுக்குக் கிடைத்தும், கிடைக்காதிருக்கும் பொழுதுகள் இவை ! புக்ஸ் கிடைத்த நண்பர்களுள் டப்பியினை உடைக்கவே இன்னமும் தீராதோரும் இருப்பர் ; உடைத்து படம் பார்த்தபடிக்கே தலைமாட்டில் கிடத்தியோரும் இருப்பர் ; பரபரவென்று வாசித்துத் தள்ளியோரும் இருப்பர் ! So இந்த நொடியினில் வெளிச்ச வட்டத்தை - MYOMS ; ஆன்லைன் மேளா போலான சிலபஸுக்கு அப்பாற்பட்ட சமாச்சாரங்கள் மீது பாய்ச்சிடல் சுகப்படாதென்பதால் அவற்றை மார்ச்சின் நடுவாக்கிலான பதிவினில் போட்டுத் தாக்கிட எண்ணினேன் ! So இந்த வாரயிறுதியில் பொதுவாய் ; ஜாலியாய் எதையேனும் கதையடித்து விட்டுக் கிளம்பலாமென்று நினைத்தேன் ! 

இந்த வலைப்பதிவின் backend-க்குப் போய் ஒவ்வொரு பதிவினையும் upload செய்யும் போதெல்லாம் இதன் வயதினை எண்ணி வியப்பது வழக்கம் ! புதுசாய் இந்த வலைப்பதிவுப் பக்கத்தை ஆரம்பித்து விட்டு, பேந்தப் பேந்த முழித்தபடிக்கே   - 'அல்லோ...இங்க யாருனாச்சும் இருக்கீங்களா ?...தனியாருக்கேன்....பயம்மா கீது !' என்று புதுப்பேட்டை தனுஷ் போல நான் கூவி கிட்டத்தட்ட பன்னிரெண்டே கால் வருடங்கள் ஆகின்றன ! தொடர்ந்துள்ள நாட்களில் : 

  • குட்டியும், பெருசுமாய் 982 பதிவுகள்  !
  • ஒரிஜினலும், டபாய்ங்க்ஸுமான ஐடிக்களுடன்  631 followers !
  • ஜாலியும், ஜோதியுமாய் 245686 பின்னூட்டங்கள்  !
  • அறுபத்தி ஐந்து லட்சத்துச் சொச்சம் பார்வைகள் !

என்பதே இன்றுவரையிலான  நிலவரம் ! 

தொடரும் நாட்களில், மாசத்துக்கொரு 6 பதிவுகள் என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் மூணே மாதங்களில் - "ஆயிரம் பதிவு கண்ட ஆந்தையனின் அரட்டைஸ்" என்ற ரவுசுக்கு இங்கே தயாராகியிருப்போம் ! Which'd mean - பன்னிரெண்டரை ஆண்டுகளில் - அதாவது மிகச் சரியாக 150 மாதங்களில், "1000 மொக்கை போட்ட அண்டாவாயன்" என்ற கெத்து waiting ! 'இம்புட்டு நாட்களுக்கு என்னதான்லே எழுதினே ?' என்ற கேள்வியை என்னை நானே சில தருணங்களில் கேட்டுக் கொள்வேன் !  இன்றைக்குக் கொஞ்சமாய் நேரம் கிடைத்திட, பதிவுகளினூடே ஒரு பின்னோக்கிய பயணத்தைப் போட்டு வைக்க, ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் கண்ணில்பட்டன ! 

*உச்சபட்ச மின்வெட்டுக்கள் தமிழகத்தில் தாண்டவமாடிய நாட்களின் பதிவினில் 346 பின்னூட்டங்கள் !! https://lion-muthucomics.blogspot.com/2012/11/blog-post_25.html 

**அதே 2012-ன் நவம்பரில் பார்த்தால் 454 பின்னூட்டங்கள் கொண்ட பதிவும் கீது : https://lion-muthucomics.blogspot.com/2012/11/blog-post.html 

*இதோ - இன்றைக்கு நாம் தொகுப்புகளாய்த் திகட்டத் திகட்டப் போட்டுத் தாக்கிவரும் க்ளாஸிக் நாயகர்களை அன்றைக்கே "டிடெக்டிவ் டைஜஸ்ட்" என்ற template-ல் விளம்பரப்படுத்தியிருந்திருக்கிறோம் !   

ஏதேதோ தலைப்புகளில் வண்டி வண்டியாய் எழுதியிருக்கிறேன் ! அவற்றின் பின்னூட்டக் குவியல்களுள் செமத்தியான சண்டைக்காட்சிகளும் அரங்கேறியுள்ளன - அற்புதமான அலசல்களும் ; நயமான நையாண்டிகளும் கரைசேர்ந்துள்ளன  ! சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இருந்திருக்கவில்லை ; 'கையப் புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துகளுக்கும் குறைச்சலே இருந்திருக்கவில்லை ! 

இன்றைக்கு நாமும் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகியிருக்கிறோம் ; ஒவ்வொருவருக்கும் கூடியுள்ள பொறுப்புகள், WWF போடும் அந்நாட்களது வேகங்களை மட்டுப்படுத்தவும் செய்துள்ளது ; and அதன் பலனாய் தளமும் சற்றே sober ஆகியுள்ளது ! Oh yes - ஒரு சந்திப்பு ; ஒரு மெகா மேளா ; மனதுக்கு நெருக்கமான நாயகர்களின் மீள்வருகை ; கலாய்க்க ஏதேனும் முகாந்திரம் - போலான ஜாலியான தருணங்களில் இன்னமும் பழைய பன்னீர் செல்வங்களாய் நீங்கள் வீறு கொண்டு எழுவதைக் காண முடிகிறது தான் ; but  ஒரு தசாப்தத்துக்கு முன்னே இருந்த நாமும் - இந்தப் பொழுதுகளின் நாமும் - கேப்டன் ஹேடாக்குக்கும், டின்டினுக்கும் இடையிலான வேற்றுமையில் இருப்பதாய்த் தோன்றியது ! Maybe இன்னொரு தசாப்தம் கழிந்த பின்னே புரஃபஸர் கேல்குலஸைப் போல சுற்றித் திரிவோமோ - என்னவோ ?!

எது, எப்படியோ - அரையணா செலவின்றி நமது வட்டத்துக்கு சேதி சொல்லும் ஒரு சுலபக் கருவியாய் இந்த blog செயல்படுவதையும் ; ஒவ்வொரு இதழின் தலையெழுத்துக்களை நிர்ணயம் செய்யும் ஜூரிக்களாய் இங்குள்ள ஒவ்வொருவரும் செயல்பட்டு வருவதும் காலவோட்டத்தில் இம்மி கூட  மாறியிருக்கவில்லை ! And தோசைக்கு பொடியா ? மல்லிச்சட்னியா ? எது ரசிக்கும் ? என்ற ரேஞ்சுக்கு உங்களின் ரசனைகளை நாங்கள் புரிந்து கொள்ளவும் இதுவொரு மார்க்கமாய் தொடர்ந்திடவும் செய்கிறது ! 

QUESTION # 1 :

So இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ?  ஏற்கனவே என் மண்டைக்குள் இது குறித்தொரு குட்டியான திட்டமிடல் உள்ளது தான் ; and அதற்கான டைமிங்கும் கிட்டத்தட்ட சரிவரும் என்றும் நினைக்கிறேன் தான் - ஆனால் இது உங்கள் கைவண்ணங்களிலான  ரங்கோலி ; so அதற்கு வர்ணமூட்டுவதும் நீங்களாகவே இருப்பது தானே பொருத்தம் ? சொல்லுங்களேன் guys - என்ன செய்யலாம் ?

Moving on, மேற்கொண்டு 2 ஜாலியான கேள்விகளும் வெயிட்டிங் : 

QUESTION # 2 :

பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? அமைதியாய் வாசித்துவிட்டு கிளம்புவோராக நீங்கள் இருந்தாலுமே, இந்த ஒற்றைக்கேள்விக்கான பதிலை சும்மா ஒரு ஜாலியான அட்டெண்டன்ஸாய் பதிவிடலாமே ப்ளீஸ் ?

QUESTION # 3 :

நடப்பாண்டின் அட்டவணையில் இதழ்களின் எண்ணிக்கையும் சரி, பருமனும் சரி, சற்றே குறைவு என்பது obvious ! வாசிக்க நேரமற்ற நண்பர்கள், இதுக்கே இன்னமும் டான்ஸ் ஆடி வருவதிலுமே ரகசியங்களில்லை தான் ! But அதற்காக வண்டியின் ஸ்பீடை ஒரேடியாக குறைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை ! வந்தே பாரத் ரயில் அப்பாலிக்கா 'வந்துட்டே இருக்கும் பாரத்' ரயிலாகிப் போயிடக் கூடாதல்லவா ? So மே மாதமோ ; ஜூன் மாதமோ - போட்டுத் தாக்கக்கூடிய  ஏதோவொரு ஆன்லைன் மேளா தருணத்தினை, ஒரு காமிக்ஸ் அடைமழைக்கான சந்தர்ப்பமாக்கிக் கொள்ளாட்டியும், ஒரு தூறலுக்கான வாய்ப்பாக்கிக் கொள்ளவாவது விழைகிறோம் ! So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால் பரிசீலிக்க உதவிடும் folks ! நான்பாட்டுக்கு எனக்குப் புடிச்ச மேகி கேரிசன் ரேஞ்சுக்கு யாரையாச்சும் கூட்டிக்கினு வந்து, உங்களைக் கடுப்பேத்தக் கூடாதில்லையா ? So இரும்புக்கவிஞரை கடத்திக் கொண்டு போய் டென்காலி கானகத்தில் பதுக்கிய கையோடு, நன்னாயிட்டு யோசிச்சு - "MY CHOICES for Online Mela" : என்று மூன்றே மூன்று ஆல்பங்களுக்கான பரிந்துரைகளைச் செய்திடலாமா ப்ளீஸ் ? Of course - ஞான் ஏற்கனவே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன் தான் ; ஆனால் போர்த்திட்டே படுக்கிறதைக் காட்டிலும் படுத்த பின்னே போர்த்துக்கிறது தேவலாமா இருக்குமோ ? என்ற எண்ணம் தான் ! So சொல்லுங்களேன் people ?!

அப்புறம் புறப்படும் முன்பாக சில updates :

1.ரொம்பவே early ; ஆனால் இதுவரைக்குமான current ஆர்டர்களில் மிஸ்டர் நோ தான் முன்னணியில் என்பது வியக்கச் செய்கிறது !

2.டின்டின் இதழ்கள் ஐரோப்பா முழுக்கப் பயணித்து வரும் அதிசயத்தினை வாய் பிளக்க ரசித்து வருகிறோம் ! கோபால் பல்பொடி விளம்பரத்தில் வருவதைப் போல சிங்கப்பூர் ; மலேஷியா ; இங்கிலாந்து ; ஸ்விட்சர்லாந்த் ; ஸ்பெய்ன் ; பிரான்ஸ் ; பெல்ஜியம் ; என்று அடுக்கிக் கொண்டே போகலாம் போலும். இதுவரைக்கும் குறைந்த பட்சமாய் 15 வெவ்வேறு சேகரிப்பாளர்கள் ஒரு வண்டி புக்ஸை வாங்கியுள்ளனர் !

3.ஆன்லைன் ஆர்டர்களில் ரவுசு செய்து வரும் 2 இதழ்கள் - "ஜேன் இருக்க பயமேன் ?" & "இரும்புக்கை மாயாவி" ! 

அப்புறம்....அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தோர்கல் புக்ஸ் போணியாகி வருகின்றன ! (யாராச்சும் ஒரு "கமான்சே quiz" ; "மேஜிக் விண்ட் பஸ்" என்றுமே ஏதாச்சும் நடத்தினால் - கணிசமான புண்ணியம் சேரும் !! )

மார்ச் இதழ்களின் ரேங்க் போடும் படலத்தை மறந்து விடாதீர்கள் & அலசல்களையுமே !! Bye all...see you around ! Have a great weekend !

Friday, March 01, 2024

காலை எழுந்தவுடன் காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். நான்காண்டுகளுக்கு ஒரு தபா வரும் லீப் வருஷத்தின் பிப்ரவரி 29-ம் தேதிக்கே உங்களது கூரியர்கள் புறப்பட்டிருக்க, இன்று காலை முதலே பட்டுவாடாக்கள் துவங்கியிருக்க வேண்டும் ! நேற்றிரவே பதிவில் தகவலைச் சொல்லியிருக்க வேணும் தான் - ஆனால் காரிகன் ஸ்பெஷலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தொங்கிக்கிடந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்தபடியே கட்டையைச் சாய்க்கவே நேரம் சரியாக இருந்தது ! So மார்ச்சின் பதிவு பின்னே ; புக்ஸ் முன்னே - என்பதே நிலவரம் !

And ஆன்லைன் லிஸ்டிங்களுமே நேற்று மாலையே ரெடி ! இதுவொரு சிக்கன பட்ஜெட் மாதம் என்பதாலும், மூன்று இத்தாலிய நாயகர்களுமே அழகாய் அதிரடி செய்யும் சாகசங்கள் என்பதாலும் - எதையும் skip செய்திடாது, மூன்றையும் வாங்க மட்டுமன்றி ; வாங்கிய கையோடு வாசிக்கவும் செய்தீர்களெனில் - சிவகாசி தேரடி முனையில் ஆளுக்கொரு சிலை வைத்து விடுவோம் ! 

அப்புறம் இந்த மாதம் முதலாய் ஒரு ranking system கொண்டு வரவும் உத்தேசித்துள்ளோம் ! 

*இதழ்கள் கைகளில் கிடைத்த நொடியினில், முதல்பார்வையில் நீங்கள் போடும் ரேங்குகள் 

&

*இதழ்களை வாசித்து முடிக்கும் நொடியினில் போடும் ரேங்குகள் 

என இரண்டையும் பதிவு செய்து செல்ல உத்தேசித்துள்ளோம் ! 

ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு மாதத்தின் best ஆகத் தேர்வாகிடும் இதழ்களை நிதானமாய் study செய்து - அவற்றுள் என்ன ஸ்பெஷல் என்பதை புரிந்திட முயற்சிப்போம் ! And உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்கள் தேர்வு செய்யும் போதே, பிடிக்காதவை பற்றியும் புரிந்திருக்கும் ! So உங்களின் ரசனைகளை இன்னும் கவனமாய் உள்வாங்கிட இந்த selections உதவிடும் என்பது உறுதி ! 

So மார்ச்சின் மூன்றில் - முதல் பார்வையில் best எதுவோ ? And எதனிலிருந்து வாசிப்பைத் துவக்கிடப் போகிறீர்களோ ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க ! ஹாப்பி ரீடிங் ! See you around ! Bye for now ! 



Saturday, February 24, 2024

ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ்..!

 ம்ம்ம்க்ஹ்ஹ்ஹ ,

ர்ர்ஹ்ஹ்ஸ்க்க் ! க்ஹ்ஹ்ர் ...? ப்ஹ்ர் !

என்ன கண்றாவிலே இது - என்கிறீர்களா ? அட, ஒண்ணும் இல்லே மக்கா, ஒரு வாரமா மார்ட்டின் கூட சுற்றித் திரிஞ்சேனா - அவரோட அசிஸ்டண்ட் ஜாவாவின் பாஷை நம்மளையும் தொத்திக்கிச்சு ! So அந்த குகை மனுஷனின் பாணியிலே..."அல்லாரையும் கும்புடறேன் ! நல்லா கீறீங்களா ?"ன்னு தான் கேட்டிருந்தேன் - மேலேயுள்ள பத்தியில் ! 

ஹீரோ மார்ட்டின் மேல பாசம் பீச்சிடலாம் - ஓ.கே. ; ஆனா அதென்ன சைடு பார்ட்டி ஜாவா மேலே திடீர் பாசம் என்கிறீர்களா ? காரணம் இருக்கே ! காத்திருக்கும் மார்ச் வெளியீடான "ஆர்டிக் அசுரன்" இதழில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜாவாவுக்கு முக்கியத்துவம் இருக்கே ! முக்கியத்துவம் மட்டுமில்லே ; முன்னெப்போதும் இல்லாத மாதிரி அவருக்கொரு லவ்ஸ் இருக்கே ! லவ்ஸ் மட்டுமில்லே...அத்தோட சேர்த்து ஒரு 'கபி..கபி'யும் இருக்குதே ! முன்னர் கார்சனுக்கொரு 'கபி கபி' தந்திட படைப்பாளிகள் மனம் இறங்கியது போல் பாவப்பட்ட ஜாவாவுக்கும் ஒரு ஜாலிலோவை இந்த ஆல்பத்தில் தந்துள்ளார்கள் ! பாருங்களேன் folks : 


ஆர்டிக் அசுரன் !

2 ஆண்டுகளுக்கு முன்னமே வெளிவந்திருக்க வேண்டியதொரு சாகசம் ! இதனையும், "வரலாற்றுக்கொரு வாடிவாசல்" ஆல்பத்தினையும் ஒருசேர வாங்கியிருந்தோம் ! And அந்த ஆண்டின் திட்டமிடலில் அசுரனே முதல் இடம் பிடித்திருக்க, கருணையானந்தம் அவர்களிடம் மொழிபெயர்ப்புக்குப் போயிருந்தது ! அவரோ, 'ஒண்ணுமே புரிலேப்பா !' என்று திருப்பி அனுப்பியிருந்தார் ! அந்நேரமோ, எனது மூத்த சகோதரியின் மகனது திருமண வேளை என்பது நினைவில் உள்ளது ! So 'அசுரனை அப்புறமா பார்த்துக்கலாம் மைதீன் ; 'வரலாற்றின் வாடிவாசல்' கதை பாதி எழுதினமட்டுக்கு இருக்கு ....மிச்சத்தை பூர்த்தி செஞ்சு தாரேன் !" என்றபடிக்கே, அந்தக் கப்பலில் ஏறி அந்த ஆண்டின் சவாரியைப் பூர்த்தி செய்திருந்தோம் ! மிகச் சரியாக, 2 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, எனது இளைய சகோதரியின் மகனது திருமணத் தருணத்தினுள், அசுரனை கரைசேர்க்கும் நேரமும் புலர்ந்திருந்தது செம தற்செயல் ! அதே போல மார்டினின் பிதாமகர் - திரு காஸ்டெல்லினி அவர்கள் இயற்கை எய்திய பொழுதோடு ஒத்துச் செல்லும் விதமாய் இந்த இதழது timing அமைந்ததுமே செம தற்செயல் ! 

ஸ்டீலின் பதிவுகளை / கவிதைகளை  வாசிச்சுக்கிட்டே, இடியாப்பத்தையும், நூடுல்ஸையும் ஒருசேரச் சாப்பிடும் உணர்வினை மார்டினின் கதைகள் விதிவிலக்கின்றித் தரவல்லவை என்பதில் no secrets ! ஆக எப்போது மார்ட்டின் கதைகளைக் கையில் எடுத்தாலுமே லைட்டாய் உதறுவது வாடிக்கை ; and இது "சுத்தமாப் புரிலேப்பா !" என்ற கமெண்ட் சகிதம் திரும்பி வந்த சாகசமெனும் போது உதறல் ஒரு மிடறு ஜாஸ்தியாகவே இருந்தது ! And இங்கு இன்னொரு பொதுவான விஷயமுமே ! இன்டர்நெட்டுக்கு முந்தைய காலகட்டங்களில், இது போன்ற நேர்கோடல்லாத கதைகள் புரியுதோ-புரியலியோ, மேம்போக்காய் பூசி மெழுகியிருந்திருப்போம் தான் ! ஆனால் இணையத்தில் தேடல்கள் சாத்தியமென்றான பிற்பாடு ஒவ்வொரு non-linear சாகசத்தினுள்ளும் வண்டி வண்டியாய் பின்னணித் தகவல்களைத் திரட்டிடல் அவசியமென்றாகி விட்டுள்ளது ! XIII தொடரில் ; டெட்வுட் டிக்கில் ; தாத்தாக்கள் கதைகளில் ; மார்ட்டின் ஆல்பங்களில் ; அட, டைகர் ஆல்பங்களில் கூட கூகுளாண்டவர் நமக்கு அருளியுள்ள விபரங்கள் ஒரு வண்டி !! And "ஆர்டிக் அசுரன்" அதற்கொரு பிரதம உதாரணம் ! கதைக்களமோ நடுக்கும் வட துருவம் ; கதைக்காலமோ 1850 ! கதைமாந்தர்களோ இன்யுவெட் எனப்படும் ஆர்டிக் வாழ் மக்களும், பிரிட்டிஷ் மாலுமிகளும், அப்புறம்...அப்புறம் சில பல அசுர ஜென்மங்களுமே ! So எங்கோ ஒரு தமிழக மூலையில் குந்திக் கிடக்கும் நமக்கு, 175 ஆண்டுகளுக்கு முன்பான இந்த  அந்நிய களம் பற்றிய பரிச்சயம் பூஜ்யமாகத் தானே இருக்கக்கூடும் ?! அந்தப் பூஜ்யத்தினில் துவக்கினேன் பேனா பிடிக்கும் படலத்தினை ! துவக்கம் என்னவோ சமகால நியூயார்க்கில் ரொம்பவே அழகான சித்திரபாணியில் இருந்திட, உற்சாகமாய் வண்டி ஸ்டார்ட் ஆனது ! ஆனால் கண்ணிமைக்கும் நொடிக்குள் கதாசிரியர் ஒரு யு-டர்ன் போட்டு நேரா ஒரு ஆர்டிக் புளியமரமாய்ப் பார்த்து வண்டியை அதன் மேலேற்றி....அதன் பின்னே மரத்துக்கு மரம் கப்பலில் டிராவல் என்று சொல்லாத குறையாய் ஏதேதோ அதிரடிகளை இறக்க ஆரம்பிக்க, அப்போது ஓபன் பண்ணினேன் கூகுள் டியூஷனை ! கழுத, பல்போகும் வயசிலே இன்றைக்குச் செய்திடும் ஆய்வுகளையும், எழுதிடும் டன் டன்னான பக்கங்களையும் நான் படிக்கிற வயசிலேயே செஞ்சிருந்தால், நிச்சயமா ஏதாச்சும் மெடல்-கிடலாச்சும் வாங்கியிருக்கலாம் போல - அம்புட்டுத் தேடல்கள் இப்போதெல்லாம் அவசியமாகின்றன ! நிஜ சம்பவங்களையும், வரலாற்று நிகழ்வுகளையும், துளியூண்டு அமானுஷ்யம் கலந்து கட்டி கதாசிரியர் பரிமாறியிருக்கும் இந்த விருந்தில் கூகுள் துணையின்றிப் புகுந்திருந்த கருணையானந்தம் அங்கிள்  திகைத்துப் போயிருந்ததில் வியப்பே இல்லை தான் என்பது புரிந்தது ! எங்கே நிஜம் முடிகிறது ? எங்கே கற்பனை சிறகு விரிக்கிறது ? வாய்க்குள் நுழையவே செய்யாத பெயர்களின் உச்சரிப்பென்ன ? பழம் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் திகிலான ஜென்மங்களின் பின்னணி தான் என்ன ? என்று தேடித்தேடி எழுத வேண்டிப் போனது ! And கதை நிகழ்ந்திடும் 175 ஆண்டுகளுக்கு முன்பான காலகட்டத்திலேயே ஒரு side track-ல் வைக்கிங்குகளின் வருகை ; அவர்களோடு ஒரு மினி பயணம் ; பச்சக்கென்று 'கட்' பண்ணி நிகழ்கால வடதுருவம் ; சச்சக்கென்று இன்னொரு 'கட்' பண்ணி சமகால நியூயார்க் ; இவற்றினூடே கதாசிரியரின் சில தார்மீக உணர்வுடனான கேள்விகள் - என்று தெறிக்கத் தெறிக்க  டிராவல் செய்கிறது இந்த 80 பக்க ஆல்பம் !  இதன் மத்தியில் நம்ம ஜாவாவின் ஜலபுல ஜங்ஸ் வேறு ! Phew ....!! டெக்ஸ் வில்லரின் கதைகள் 220 பக்கங்கள் கொண்டவை ; ஆனால் டிக்கியை இருத்தி எழுத ஆரம்பித்தால் கைவிரல்கள் நோவுமே தவிர்த்து, மண்டையைப் பிய்க்க அவசியமாகிடாது ! ஆனால் அதில் மூன்றிலொரு பங்குப் பக்கங்களே கொண்டிருந்தாலும், மார்டினை கரைசேர்ப்பதற்குள் தலைக்கு ரெண்டுவாட்டி டை அடிக்க வேண்டிப்போகும் போலும் !! சகலத்தையும் முடித்து இன்று மார்ட்டின் பிரிண்ட் ஆகியிருப்பதைப் பார்த்த போது மனசுக்குள் ஒரு இனம்புரியா சந்தோஷம் நிலவியதை மறுக்க மாட்டேன் ! 

ஆர்டிக் அசுரன் - ஒரு மறக்கவியலா டெரர் பயணம் !! பாருங்களேன் - இந்த இன்னொரு பக்க ப்ரீவியூவையும் :

மார்ச்சின் வாசிப்பில் இது முதலிடம் பிடித்தால் நான் வியப்படையவே மாட்டேன் தான் ! 

Moving on, இதோ - மார்ச்சின் நமது தலைமகன் !! நிஜத்தைச் சொல்வதானால் இந்த 2024 புலர்ந்தது முதலாய் முதல் 2 மாதங்களிலுமே நம்மவர் முதலிடத்தில் நிற்கவில்லை என்பதே நிஜம் ! ஜனவரியை டின்டினின் அதகள அறிமுகமும், லார்கோவின் பரபர மீள்வருகையும் ஆக்கிரமத்திருந்தன ! பிப்ரவரியின் ஒளிவட்டத்தை டெட்வுட் டிக்கும் ; இளவரசியும் பகிர்ந்திருந்தனர் ! So இந்த மார்ச் மாதத்திலும் தல ஒரு tough போட்டி சந்திக்கவிருக்கிறார் - சக இத்தாலிய ; சக போனெல்லி நாயகர்களின் ரூபத்தில் ! பார்க்கலாமே - இம்முறை நிலவரம் என்னவென்று ! இதோ - ஒரிஜினல் ராப்பருடன் டெக்ஸ் & கார்சனின் "புயலுக்குப் பின்னே பிரளயம்" சார்ந்த preview : 

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "ஒரு மௌன நகரம்" கதையினை நினைவூட்டும் template இங்கும் ! ஆனால் கதை பயணிப்பதோ வேறொரு ரூட்டில் ! இந்த ஆல்பம் 2 மாதங்களுக்கு முன்னே வெளியாகியிருந்தால், வெள்ளக்காடாய் மிதந்து கொண்டிருந்த நம்மூர்களின் நிலையினைப் பிரதிபலித்தது போலிருந்திருக்கும் - becos கதை ஆரம்பிக்கும் போதே நமது ரேஞ்சர்கள் அறிமுகமாவது குதிரைகளின் மீதமர்ந்தல்ல !! மாறாக - 'ஏலேலோ ஐலசா..' என்று துடுப்புப் போட்டபடியே ஊருக்குள் நுழைகிறார்கள் ! And வெள்ளத்தில் அடித்து வரப்படும் ஒரு இளம் பெண்ணின் சடலம் அவர்களை வழிமறிக்கிறது ! யாரந்த மங்கை ? அவளைக் கொலை செய்த கொடூரன் யார் ? கொலைக்கான முகாந்திரமென்ன ? என்று தேடலை ஆரம்பிக்கிறார்கள் டெக்ஸ் & கார்சன் ! Yet another வித்தியாசமான ஓவிய பாணியில் - சிம்பிளாய், அழகாய் நமது ஆதர்ஷ நாயகர்கள் பவனி வருகிறார்கள் ! பாருங்களேன் ! 

இந்த மார்ச்சில் காத்துள்ள 3 இதழ்களுமே black & white தான் ; மூன்றுமே போனெல்லியின் நாயகர்கள் தான் (டெக்ஸ் ; மார்ட்டின் & மிஸ்டர் நோ) & மூன்றுமே செம crisp வாசிப்புகளே ! So பரணில் சாத்திப் போடும் படலங்களுக்கு இம்முறையுமே அவசியமிராதென்று தோன்றுகிறது ! Fingers crossed ! 

இந்த நொடியில் எனது கேள்வி இது தான் : இந்த மார்ச்சில் உங்களது முதல் வாசிப்புத் தேர்வு எந்த இதழாக இருக்குமோ guys ?

And கேள்வி # 2 : பிப்ரவரியின் மூன்று இதழ்களுக்கான உங்களின் ரேங்க் எவ்விதம் இருக்கும் ? (மாடஸ்டி ; டெட்வுட் டிக் & டெக்ஸ்) 

கலர் மேளா ஏப்ரல் முதலாய் தோரணம் கட்டத் தயாராகி வருகிறது ! And அதற்கொரு முன்னோடியாய் பெளன்சர் மறுக்கா ஆஜராகிறார் ஏப்ரலில் ! தெறிக்கும் கோடை மலர் guys ! மீண்டும் சந்திப்போம் ! Bye for now ...have a lovely weekend all ! 

Tuesday, February 20, 2024

பல்லடத்துப் படலம் !

நண்பர்களே,

வணக்கம். காமிக் கான் ஞாயிறு ....!! எழுந்த போதே கொட்டாவியோடு ஒரு சன்னமான பரபரப்பும் தொற்றிக்கொண்டிருந்தது ! 'இன்னிக்கி தானே டின்டின் கூப்பன்களின் லக்கி டிரா ; நேபாளம் செல்லவிருக்கும் அதிர்ஷ்டசாலியைத் (!!) தேடிப் பிடிக்கவிருக்கும் நாள் !!' என்ற எண்ணம் உள்ளுக்குள் வேகம் எடுத்துக் கொண்டிருந்தது ! ஆனால் இன்னொரு பக்கமோ லைட்டாய் ஒரு கலக்கமும் ! ஒரு பேமிலி தோசையை மடக்காமல் அப்படியே வைக்கக்கூட சிரமப்படும் அளவிலானதொரு புறாக்கூடு ஸ்டால் ; எதிர்த்தாப்லே பாதையில் நின்னால் குச்சைக் கொண்டு குத்தும் தன்னார்வலர் குழு ; பற்றாக்குறைக்கு இந்த தொள்ளாயிரம் ரூபாய் நுழைவுக்கட்டணம் மிரட்டுவதில் ரொம்பச் சொற்பமாகவே நமது ரெகுலர் வாசகர்கள் வருகை தந்திடும் நிலவரம் !! இவற்றினூடே குலுக்கலை நடத்துவது எவ்விதம் ? சிவனேன்னு ஊருக்குப் போய் சீனியர் எடிட்டரை சீட்டெடுக்கச் சொல்லிப்புட்டு அதை லைவில் காட்டிடலாமா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது ! ஆனால் "அம்புட்டு சீட்டிலேயும் ஒரே பெயரை எழுதிப்புட்டானுங்க ! எந்த சுவிட்சை அமுக்கினாலும் மேற்படிக் கட்சிக்குத் தான் ஓட்டு விழுகுதுடோய் !" என்ற ரீதியில் நம்மை மு.ச.க்குள் பிதுக்க ரெடியாகி விடும் காட்சி மனக்கண்ணில் ஓட, அந்த எண்ணத்தை சடுதியில் டிராப் செய்து விட்டேன் ! ஒண்ணும் இல்லாங்காட்டி - ஸ்பைடர்மேனாய், அனிமே கதாப்பாத்திரங்களாய் டிரெஸ் பண்ணிக்கொண்டு போற வார குட்டீஸ்களில் யாரையாச்சும் ஸ்டாலுக்குள் கூட்டியாந்து டப்பிக்குள் கைவிட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்ல வேண்டியது தானென்று தீர்மானித்திருந்தேன் !

காமிக் கானில் என்ன எதிர்பார்ப்பதென்று முதல் தினத்தின் உபயத்தில் நன்றாகவே புரிந்திருக்க, அது சார்ந்த குறுகுறுப்பு என்னுள் இல்லை ! முதல் நாளின் விற்பனையில் மாயாவி ஹெவியாய் ஸ்கோர் செய்திருந்தார் ; இத்தனைக்கும் நாம் லேட்டஸ்ட்டாய் மறுபதிப்பிட்ட இரண்டே title-களைத் தான் கொண்டு போயிருந்தோம் ! And டெக்சிலுமே லேட்டஸ்ட்டாக வெளிவந்திருந்த மூன்றே டைட்டில்களைத் தான் சென்னைக்குப் பயணமாகியிருந்தது ! So அவசரம் அவசரமாய் மாயாவியில் மேற்கொண்டு புக்ஸ் ; டெக்சில் இன்னும் சில டைட்டில்ஸ் என்று சிவகாசியிலிருந்து போட்டு விடச் சொல்லியிருக்க, அவற்றை நமது staff சரவண கணேஷ் எடுத்தும் கொணர்ந்து ஸ்டாலில் சேர்த்த சற்றைக்கெல்லாம் நானுமே அங்கே ஆஜராகியிருந்தேன் ! 

மணி 11 ஆன நொடியே முதல் நாளைப் போலவே விசிட்டர்ஸ் சுனாமியாய் உட்புகுந்தனர் !! சனிக்கிழமையைப் போலவே ஓட்டமாய்ப் போய் பொம்மை கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த நீள நீளமான சாமுராய் கத்திகளையும், டி-ஷர்ட்களையும் ரவுண்டு கட்டத் துவங்கினர் ! நான் கூட அந்தக் கத்தி ஒரு நானூறு, ஐநூறு இருக்குமென்று நினைத்திருந்தேன் - அது விற்பனையாகும் துரிதத்தைப் பார்த்து ! ஆனால் சாமுராய் வாளும் கையுமாய்,  தனது ஜூனியரோடு ஸ்டாலுக்கு வந்திருந்த ரெகுலர் வாசக நண்பரிடம் கேட்ட போது - "விலை 2500 சார்" என்றார் !! "சர்தான் - இவுகளுக்குலாம் மூ.ச.கிடையாது போல...நல்லா வருவீங்கடா டேய் கடைக்காரனுங்களா !!" என்று நினைத்துக் கொண்டேன் ! டி-ஷர்ட்களிலும் இதே கூத்தே நடந்து கொண்டிருந்தது ! ஈரோட்டுச் சந்தையிலோ ; திருப்பூரின் எக்ஸ்போட் மீதங்களிலோ, அம்பது ரூபாய்க்கு அள்ளிக்கினு, இன்னொரு முப்பது-நாப்பது ரூபாய்க்கு அவற்றின் மீது பிரிண்ட் போட்டுக்கினு - அவற்றை "ONLY 599 ; ரெண்டா வாங்குனா ரூ.999 " என்று ஓட்டிக்கொண்டிருந்தார்கள் ! இதையெல்லாம் பார்த்து விட்டு நம்மாட்களும் - "சார்...நாமளும் பொம்மை போடுவோம் ; டி-ஷர்ட் போடுவோம் ; போஸ்டர் போடுவோம் !" என்று பொங்காதில்லை ! ஆனால் இந்தக் கடைக்காரர்களுக்கு போணியாகும் சரக்குக்கும், நாம் இதனில் மெனெக்கெட்டால் ரெடி செய்திடக்கூடிய சரக்குக்கும் பெரும் வித்தியாசம் இல்லாது போகாதென்பதை பொறுமையாய்ப் புரிய வைத்தேன் ! இந்த காமிக் கான்  தலைமுறை தேடித் தேடி ; ஓடி ஓடி சேகரிப்பவை சகலமும் ஜப்பானிய மங்கா, அனிமே தொடர்களின் நாயக உருவங்கள் & இத்யாதிகளே ! அந்தப் பரிச்சயமற்ற நமக்கோ - "யார்டா இந்தப் பூச்சாண்டிகள் ?" என்று தான் கேட்கத் தோன்றும் ! "லக்கி லூக் டி-ஷர்ட்கள்" என தயாரித்தோமென்று வைத்துக் கொள்ளுங்களேன் - இந்த 2k கிட்ஸுக்கு பெருசாய் ஈர்ப்பெல்லாம் இருக்குமா ? என்பதில் பலத்த சந்தேகமுண்டு எனக்கு ! ரைட்டு, நம்ம ரெகுலர் வாசகர்கள் மத்தியில் அவற்றை விற்றிடலாமென்றால் - ஆன்லைன் மட்டுமே அதற்கான வாய்ப்பாக இருந்திடக்கூடும் - simply becos புக்ஸ் அல்லாத எதையுமே  காமிக் கான் தவிர்த்த ரெகுலர் புத்தக விழாக்களில் விற்பனை செய்திட அனுமதிக்க மாட்டார்கள் ! And ஆன்லைனில் இங்கிலீஷ் காமிக்ஸ் விற்கும் ஆமை வேகத்தில் இவையும் நகர்ந்திடும் பட்சத்தில் - காசை முடக்கியதே மிச்சமாகும் ! தவிர இதற்கெனவென்று ஊர் ஊராய் நடக்கும் காமிக் கான்களிலெல்லாம் நாம் பங்கேற்பதும் நடைமுறை சாத்தியமற்ற சமாச்சாரம் ! So கண்ணெதிரே யூத் பட்டாளம் அடிக்கும் ரகளைகளை ரசிப்பதோடு போய்க்கினே இருப்பதே இப்போதைக்காவது நலமென்று எனக்குத் தோன்றியதை நண்பர்களிடம் விளக்கினேன் ! But still - பார்க்கலாமே.......மாறும் நாட்களில் இந்த merchandise தடத்தினுள் நியாயமான விலைகளோடு, நாமும் புகுந்திட வாய்ப்பேதாச்சும் அமையுமாவென்று ! அப்டிக்கிப்பிடி நாமுமே பெரூசாய் கத்தியெல்லாம் போட்டோமென்றால். நம்ம சேலத்து டாக்டர் சுந்தர்லாம் - "மர்மக்கத்தி சார் " என்றபடிக்கே ஒரு ஆடறுக்கும் சைசிலான சாமுராய் பொம்மைக்கத்தியோடு போஸ் கொடுப்பாரோ - என்னவோ ?!  

இங்கிலீஷ் கிராபிக் நாவல்களைக் குவித்துக் கொணர்ந்திருந்த ஓரிரு புத்தகக்கடைகளுக்குள் கூட்டம் பொங்குவதற்கு முன்பாய் புகுந்தால் கொஞ்சம் பார்க்கலாமே ? என்று தோன்றியதும், விறுவிறுவென்று அங்கே நடந்தேன் !  ஜிலு-ஜிலுவென்று காட்சி தந்த அமெரிக்கப் படைப்புகள் ; அவ்வளவும் ஹார்ட் கவர்களில் & அவ்வளவும் 1600 ; 2000 என்ற ரேஞ்சிலான விலைகளில் ! இன்னும் ஆறாயிரம் ; எட்டாயிரம் விலைகளுக்குமே box sets ; தொகுப்புகள் என்றிருந்தன ! சுற்றிச் சுற்றி வந்து விலைகளை பார்த்தபடிக்கே 'ஆவென்று' வாய்பிளந்து கொண்டிருந்த ஜனம் மத்தியில் - "இப்போ தெரியுதுடா லயன்-முத்து காமிக்ஸ் விலைகளோட அருமை !" என்றொரு குரல் ஒலித்ததும் காதில் விழுந்தது ! சின்னதொரு புன்னகையோடு, நான் தேர்வு செய்திருந்த சில புக்ஸுக்கு ஏழாயிரத்து சொச்சம் காசைக் கட்டிவிட்டு நம்ம ஸ்டாலுக்குத் திரும்பினேன் ! 

அதற்குள் நமது ரெகுலர் நண்பர்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தனர் ! முன்னாள் அய்யம்பாளையத்தாரும், இந்நாள் சென்னைப்பட்டினத்தாருமான வெங்கடேஸ்வரன் சார் தனது மகளுடன் ஆஜராகியிருந்தார் - "இது என்ன சார் கூத்தா இருக்கு - காமிக்ஸ் கான்னு பேர போட்டுப்புட்டு புக்ஸ் தவிர பாக்கி எல்லாத்தையும் விக்குறாங்களே ?" என்ற கேள்வியுடன் ! "ப்ரீயா விடுங்க சார் ; இதுவொரு யூத் உலகம் !" என்றபோதே தலைக்குள் தீர்மானித்திருந்தேன் - நண்பரின் மகளைத் தான் லக்கி டிரா சீட்டை எடுக்கச் சொல்லணுமென்று ! சற்றைக்கெல்லாம் பல்லடம் சரவண குமார் சார் ; நம்ம செந்தில் சத்யா ; சேலத்திலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்தும் சேலம் குமார் சார் with ஜூனியர் ; நண்பர் ஸ்ரீராம் ; சுரேஷ் தனபால் சார் ; ஆத்தூர் மாதேஸ்வரன் சார் ; நண்பர் ரபீக் ராஜா என்று கூடியதும், "ரைட்டு...குலுக்கிப்புடுவோமா ?" என்றபடிக்கே டின்டின் டப்பியினை வெளியே எடுத்தேன். மொத்தம் 312 நண்பர்கள் அனுப்பியிருந்த கூப்பன்கள் உள்ளே இருந்தன ! 'நம்ம இந்த பொட்டியின் பக்கத்திலே கூட போகப்படாதுடா சாமி !' என்றபடிக்கே லைவ் வீடியோ எடுக்கும் பொறுப்பை பல்லடத்தாரிடம் ஒப்படைத்திருந்தேன் & அவரும் முன்னாடி நின்றபடிக்கே வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார் ! 

டப்பிக்குள் கையை விட்டு செமையாகக் கிளறிவிட்டு ஒரேயொரு சீட்டை எடுக்கும்படி ஹரிணியிடம் சொன்னேன் & அவரும் அதை அழகாய்ச் செய்தபடிக்கே ஒரு சீட்டை நீட்டினார் ! நீயே பிரிச்சு காட்டும்மா" என்றவுடன் அதனை ஓபன் பண்ணி என்னிடம் காட்டிய நொடியில் தூக்கிவாரிப் போட்டது எனக்கு !! "சரவணகுமார் பல்லடம்" என்றிருந்தது அந்தச் சீட்டில் !!!! வெற்றி பெற்று நேபாளம் செல்லவிருப்பவரின் பெயரை நண்பர்களுக்குக் காட்டிய நொடியில் அதே இடமே ஒரு சந்தோஷக்களேபர பூமியானது ! முன்னே மஞ்சள்சட்டை மாவீரராய் நின்றபடிக்கு வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் முகத்திலோ ஓராயிரம் குழப்ப ரேகைகள் ! ஒரு மாதிரியாய், ஜெயம் கண்டு, நேபாளம் செல்லவிருப்பது நீங்களே தான் சார் - என்று அவருக்கு உணர்த்திய போது அவரது முகத்தில் நவரசங்களும் நாட்டியமாடின ! வெற்றி பெற்ற வியப்பு ஒரு பக்கம் ; மகிழ்வு இன்னொரு பக்கம்....அப்புறம்  'என்ன மட்டும் வீட்டிலே தனியா போக உடமாட்டாங்களே சார் - நீங்க ஒரு டிக்கெட் போட்ருவீங்க ; நானோ வீட்டார் 3 பேருக்கு மேற்கொண்டு போட்டாக வேண்டி வருமே !!' என்ற கவலை இன்னொரு பக்கமென்று புலம்ப ஆரம்பித்திருந்தார் ! அதற்குள் க்ரூப்களில் ; FB-ல் என தகவலை நண்பர்கள் பதிவிட்டிருக்க, நெடுக வாழ்த்துக்கள் மழை ! 'இந்த நொடியினை வயிற்றுக்குப் பெட்ரோல் போட்டபடிக்கே கொண்டாடுவோம் !'  என்றபடிக்கே அனைவரோடும் Food Court பக்கமாக நடையைப் போட்ட சமயத்தில் - பார்த்திபனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போடக் கிளம்பிய பலிகடா ஆடைப் போலவே சரவணகுமார் சார் தோற்றமளித்தது எனக்கு மட்டும் தானென்றில்லை ! 

சந்தோஷ உரையாடல்களோடே அங்கே பீட்சாக்களை வாங்கி, தரையிலேயே அமர்ந்து, பசியாறிய பின்னே, நண்பர்களில் சிலர் அங்கிருந்த Gaming சென்டரில் பொழுதைக் கழிக்கக் கிளம்பினர் & மீதப் பேர் ஸ்டாலுக்குத் திரும்பினோம் ! ஸ்டாலில் விற்பனை ஜரூராய் ஓடிக்கொண்டிருப்பது ஒரு சன்னமான மனநிறைவினைத் தந்து கொண்டிருந்தது ! ஆரம்பத்தில் நம்மை ஏதோ டைனோசார்களைப் போல் பார்த்து வந்த பாங்கு மாறியிருந்தது & காமிக் கானில் பொஸ்தவங்களும் வாங்கலாம் போலுமென்ற புரிதலுடன் மக்கள் ஆர்வமாய் புக்ஸ் வாங்கினர் ! எத்தனை மிரட்டலான களம் நம்மைச் சுற்றி இருந்தாலுமே,  வாஞ்சைகளிலும், விற்பனைகளிலும் நமக்கென ஒரு ஸ்பெஷலான இடத்தினை நீங்கள் ஒதுக்கித் தருவதை yet again தரிசிக்க இயன்றது ! காமிக் கானில் மட்டும் தானென்றில்லை ; கோவையில் துவங்கி, ஈரோடு, மதுரை, விருதுநகர்,  சேலம், சென்னை, திருப்பூர், நெல்லை என சமீபத்தைய எல்லா விழாக்களிலுமே நம் முத்திரையினை அழுந்தப் பதிவிட நீங்கள் ஒவ்வொருவருமே ஏகமாய் பங்களித்துள்ளீர்கள் guys ! 'விக்கவே இல்ல...கூட்டமே வரலே...மந்தம்...டல்..!' என இதர விற்பனையாளர்களும், பதிப்பகங்களும் புலம்பிடும் ஸ்தலங்களில் கூட நம்மை கம்பீரமாய் புன்னகைக்க அனுமதித்துள்ளீர்கள் ! Of course இந்த அன்பு ஒற்றை நாளிலோ, ஆண்டிலோ கிட்டியிருக்கவில்லை தான் ; அந்த ஒட்டுமொத்த 52 ஆண்டுக் காலத்தின் எத்தெத்தனையோ பேர்களின் உழைப்புகளுக்கு இன்று சிறுகச் சிறுகவொரு அங்கீகாரம் கிட்டி வருவதாகவே பார்க்கத் தோன்றுகிறது ! Oh yes - பார்க்கும் அம்புட்டுப் பேரும் நம்மை வாரியணைத்துக் கொள்கிறார்களென்றெல்லாம் அள்ளி விட மாட்டேன் ; நவநாகரீகம் என்ற கனாவில் - 'ஓ..டாமில்லே காமிக்ஸ் தானா ? You don't have anything in English ?" என்று கேட்டுப் போகும் டாம்பீக அம்மணியருக்கு இன்னமும் பஞ்சமே கிடையாது தான் & "இதுலாம் நான் சின்னப் பிள்ளையிலே படிச்சது" என்றபடிக்கு நடந்து போய்க்கினே இருக்கும் பெரிய பிள்ளைகளுக்கும் குறைவே கிடையாது தான் ! ஆனால் "தமிழில் காமிக்ஸ்" என்பது தீண்டத்தகா ஒரு சமாச்சாரமே அல்லவென்று உணர்ந்திருப்போரின் மத்தியில், நமது தரங்களுக்கும், variety-களுக்கும் சந்தோஷமான வரவேற்பு சின்னச் சின்ன அளவுகளில் பெருகி வருவது pretty much obvious ! In fact - நமது ஸ்டாலுக்கு வருகை தந்தவொரு ஹிந்தி பதிப்பகத்தவர் மிரண்டே போனார் நமது களங்களைக் கண்டு !! அதன் நீட்சியாய் காமிக் கானின் விற்பனையும், இங்கு நமக்குக் கிட்டிய விளம்பரங்களையும் பார்த்திட முடிந்தது ! 

"குறுக்கு கழன்றே போச்சு சார் ; நாங்க கிளம்புறோம்' என நண்பர்கள் கிளம்பிட, நானுமே புறப்படத் தயாரான போது, முக்கியமான இரு நபர்களோடு கொஞ்சம் பேசிட வாய்ப்பொன்று அமைந்தது ! அவற்றிற்கு பலனேதும் இருக்குமா ? என்பதை வரும் நாட்களில் புரிந்திட சாத்தியமானால் மேற்கொண்டு சொல்கிறேன் அவை பற்றி ! 

கிளம்பும் முன்பாக இந்த மங்கா ; மாங்கா என்று ஆளாளுக்கு அடிச்சுக்குறாங்களே இளசுகள் மத்தியில், அது எப்படித்தான் இருக்குடா சாமீ ? என்ற குறுகுறுப்பில் ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில் போய்ப் பார்த்தேன் ! பொறுமையாய்ப் புரட்டி, புக்கை  பின்னேயிருந்து முன்னே என்று கொஞ்சமாய் வாசிக்க முயன்றேன் ! இதுநாள்வரை நாம் காமிக்ஸ் வாசிப்பில் செய்துள்ள சகலத்தையுமே உல்டாவாய் செய்திட வேண்டியிருந்தது & ரெண்டு நிமிஷத்துக்குள்ளேயே பாயைப் பிறாண்டலாம் போலிருந்தது எனக்கு. தவிர கதைக்களங்களுமே இன்னிக்கு ஆரம்பித்தால் நமது கொள்ளுப்பேரப் பிள்ளைகள் காலத்தில் நிறைவுறும் என்பது போல் தென்பட்டன ! கதைபாணிகளுமே ஒருதினுசாய் எனக்குத் தோன்றியது ! ஆனால் ஜூனியர் எடிட்டரிடம் கேட்டால் ஒவ்வொரு தொடர் பற்றியும் ஒரு விளக்கம் தந்தான் ! ஊஹூம்....மாங்கா தின்னாலே பல்லெல்லாம் கூசும் நம்ம வயசுக்கு இந்த மங்கா புடிபடாது என்று தீர்மானித்தேன் ! ஆனால் இளைய தலைமுறைக்கு இது ரசிக்குமெனில், ஜூனியரின் பொறுப்பில் இக்கட தனித்தட சவாரி செய்து பார்க்கலாம் ! எனது கேள்வியெல்லாம் இது தான் : 

இது முழுக்கவே ஒரு புதிய வாசக வட்டத்தை நோக்கியான பயணம் ; தற்போதைய நமது வட்டத்திடம் இதனைத் தந்தால் தொண்ணூறு சதவிகிதத்தினர் மலங்க மலங்கத் தான் முழிப்பர் என்பதில் எனக்கு ஐயங்களில்லை ! அந்தப் புதுசாக, யூத்தான வாசக வட்டமானது மங்கா, அனிமே என்பதையெல்லாம் தமிழில் படிக்கவும், ரசிக்கவும் செய்யுமா ? நெட்பிலிக்சிலோ, வேறெதிலோ டப்பிங் செய்த தமிழில் கேட்டுப் பழகியிருக்கும் இளைஞர் அணி கூட தமிழ் வாசிப்பினை அங்கீகரிக்குமா ? என்பதே எனது ஐயம் ! அதைச் சரிவரத் தீர்த்து வாய்க்கு உதவிடுங்கள் புலவர்களே !! 

இப்போதைக்கு பல்லடத்தாருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரை நேபாளத்திலிருந்து blog எழுத்தாக கோருவோமா ? "பல்லடத்துப் படலம் !" ரெடியா all ?  Bye guys...see you around ! நாளை தங்கை மகனுக்குத் திருமணம் ; so தாய்மாமா கடமைகளில் நேற்றிலிருந்தே கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் ! அதனால் தான் பதிவினை நேற்றைக்கே முடிக்க இயலவில்லை ! Sorry !

Have a great week ahead !!